எளிய வீட்டு வைத்ய குறிப்புகள்

அஜீரணம்: அஜீரணத்தால் அவதி படுபவர்கள், நல்ல சூடாக வெந்நீர் அருந்தினால் நல்ல பலன் அளிக்கும்.

வாய் நாற்றம்: சிலருக்கு சாதரணமாகவே வாய் துர்நாற்றம் அடிக்கும்; சிலருக்கு, பூண்டு, வெங்காயம் சாப்பிட பின் அடிக்கும், இதற்கு சிறந்த மருந்து, எலுமிச்சம் பழ சாரை பிழிந்து அதில் வாய் கொப்புளிதால் துர் நாற்றம் ஓடியே போய் விடும்.

நெஞ்சில் சளி கட்டினால் மிகுந்த அவஸ்தை தான்; போதா குறைக்கு அதனுடன், தலை வழியும் சிலருக்கு சேர்த்து விடும். விரளி மஞ்சளை எடுத்து, நெருப்பில் காட்டி அதில் இருந்து வரும் புகையை முகர்ந்தால், நெஞ்சு சளி போவதுடன், தலை வலியும் உடனே அகலும்.

இருமலுக்கு: இஞ்சி சாறு சிறிதளவு எடுத்து, தேனுடன் சம அளவு கலந்து, ஒரு நாளைக்கு, மூன்று வேலை என்கிற முறையில் சாப்பிட்டால் இருமல் காணமல் ஓடி விடும்.

Comments