காக்கையும் வடையும்

ஒரு ஊர்ல ஒரு காக்கை இருந்துச்சாம். அது உட்கார்ந்திருந்த மரத்துக்கு பக்கத்தில இருந்த வீட்ல ஒரு பாட்டி, நல்ல வயசான பாட்டி, மாவு அரைக்க முடியலனு கடைல இருந்து வடை மாவு ரெடி மேட் ஆ வாங்கிட்டு வந்திருந்தாங்க. கூடவே சட்னி அரைக்க துருவின தேங்காய், எல்லாம் வாங்கிண்டு வந்திருந்தாங்க. காக்கா ஆஹா நாம இன்னிக்கு வடை சாப்பிடலாம்னு குஷியா இருந்திச்சு. ஆனா அந்த பாட்டிக்கு ரொம்ப முடியலனு இதெல்லாம் வாங்கிண்டு வந்து வெச்சுட்டு கொஞ்ச நேரம் படுத்துக்க போனாங்க. வெறும் மாவ எப்படி திங்கறது அதனால டைம் பாஸ் பண்ணனும்னு தன்னோட கூட்டுக்கு போய் தன்னோட ipoda எடுத்துண்டு வந்திச்சு. (காக்கா எப்படி ipod வெச்சிருக்குன்னு கேட்க கூடாது).

காதுல மாட்டிண்டு "where is the party" பாட்ட கேட்க ஆரம்பிச்சது. இருகர கொழுப்புக்கு நுனி கிளைல உகந்து டான்ஸ் வேற. கீழ இருந்து ஒரு நரி கேட்டே இருந்தது. சரி நம்ம தாத்தா போல இந்த காக்கா வ பட சொல்லி நாம வடைய எடுத்துக்க வேண்டியது தான் னு திட்டம் போட்டது. ஒரு அறை மணி நேரம் கழிச்சு பாட்டி வடை சுட வந்தாங்க. அப்போ தான் காக்கைக்கு தோணிச்சு ஐயோ நாம போய் வடை எடுக்கும் பொது பாட்டு கேட்க முடியாதே. சரின்னு திரும்ப கூட்டுக்கு பறந்து போச்சு. நரிக்கு ஷாக் ஆஹா நம்ம ஆசை படி வடை சாப்பிட முடியாது போல இருக்கேனு.

ஒரு அஞ்சு நிமிஷத்துல நம்ம ஹீரோ காக்கா கைல எதையோ தூக்கி கிட்டு வந்து உகந்திசு. நரிக்கு அது என்னனு தெரில. கொண்டு வந்தத தான் உக்காந்திருந்த எடத்துல வெச்சுட்டு பாட்டி சுட்டு வெச்சிருந்த வடைல ரெண்ட எடுத்துண்டு வந்திருச்சு. ஒரு வடைய கால வெச்சுண்டு இன்னொரு வடைய பக்கதுல தட்டுல போட்டு கொஞ்சம் ஆற வெச்சது. அந்த நேரத்துல நம்ம நரி காக்கா நீ பாடு கேட்டுகிட்டே சூபெர் ஆ டான்ஸ் ஆடினயே எனக்கும் கொஞ்சம் ஆடி காமியேன் னு. காக்கா உஷாரா காலுக்கு அடில இருந்த வடைய எடுத்து வைல வெச்சுண்டு டான்ஸ் ஆடிச்சு. நரி அட பாட்டு பாடிகிட்டே டான்ஸ் ஆடுன்னு சொல்லவும் காக்கா வாய்ல இருந்த வடைய எடுத்து தட்டுல வெச்சுட்டு பாடிகிட்டே டான்ஸ் ஆடிச்சு. ஏமாந்து போன நரி சீ சீ இந்த வடைல cholestrol அதிகம்னு ஓடி போய்டுச்சு.

மாரல் ஆப் தி ஸ்டோரி : யார் என்ன சொன்னாலும் அத அப்படியே follow பண்ணாம கொஞ்சம் யோசிச்சு பண்ணனும்.

Comments