முருகன் ஸ்லோகம்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூடும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுறுவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மனம் புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆனா பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்த்த பெருமானே

Comments