Lyrics of Jaya Jaya Devi song

ஜய ஜய  தேவி ஜய ஜய தேவி
துர்கா தேவி சரணம் (2)

துர்கை அம்மனை துடித்தாள் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்
கர்மா வினைகள் ஓடும்
சர்வ மங்களம் கூடும் 

பொற்கரங்கள்  பதினெட்டும்
சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும்
வெற்றி பாதையை காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய் போல் நம்மை காப்பவளே

சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்க ,கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா (2)
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடிமேல் சூடிடுவாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கயற்கரசியும் அவளே
அங்கயற் கண்ணியும் அவளே

Comments