வீட்டு வித்யா குறிப்புகள்

தலைவலி போக:
ஒரு தேக்கரண்டி லவங்கத்தை பொடித்து, அத்துடன் ஒரு சிட்டிகை பொடித்த கல் உப்பை சேர்த்து குழைத்து, நெற்றியில் பற்று போட்டால் தலை வலி பறந்து விடும்.

சோர்வு நீங்க:
ஒரு டம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, மூன்று ஸ்பூன் தென், கால் ஸ்பூன் உப்பு கலந்து பருகினால், சோர்வு நீங்கி புத்துணர்ச்சி வரும்.

சுளுக்கு மறைய:
பாதாம் என்னையும், பூண்டு சாரையும் சம அளவில் எடுத்து சுளுக்கு விழுந்த இடத்தில் மேல் இருந்து கீழ் நோக்கி தேய்க்க சுளுக்கு விடும்.

பல் கூச்சம், பல் வியாதி வராமல் இருக்க:
தினமும் வாய் கொப்புளிக்கும் பொழுது ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் கல் உப்பை கரைய விட்டு வாயில் ஒரு நிமிடம் வைத்திருந்து விட்டு வாயை கொப்புளிக்க வேண்டும்.

Comments